பல ஆண்டுகள் பறந்து ஓடிப்போனது
ஊர் திரும்பி வருகிறேன் உன் வீட்டை தேடி !!!
மண்ணில் என்
பாதச்சுவடு பதிய
மனதின் பள்ளம்தோண்டும் உன் ஞாபகங்கள் !!!
முற்றத்து வாசலிலே நீ முகம் காட்டி நிற்க- உன் வாசலிலே ஒட்டிப்போன என் பாதங்கள் அவை முடிந்துபோன
காலங்கள் !!!
வார்த்தைகள் இல்லாத அச்சம்பவங்கள் இன்பத்தின் தளங்களாய்- இன்றோ
இதயத்தின் கனங்களாய் !!!
திசை மாறிப்
போன பறவை தன் பழைய கூட்டைத் தேடி வருவது போல உன்னைக் தேடி வருகிறேன் !!!
நீ வசித்த வீடு நிசப்தமானது !!
உன் கொலுசு ஒலிகள் இன்றும்
என் செப்பறையில்!!!
செல்லரித்துப்போன செய்திகளா நம் காதல் இல்லையடி சொற்கள் பேசத் தவறிய சோகங்கள்!!!!
என் இறந்த காலத்தின் இலக்கணமே
என் அடிமனதின்
ஞாபக பிரளயமே !!
பார்வைகளால் இணைந்தோம் அந்த பருவமழையில் ஒன்றாய் நனைந்தோம்!!
மானசீக காதல் தேர்வில் மரணம் தானே உனக்கு மதிப்பெண் போட்டது !!!!!
தண்ணீரில் மூழ்கிப் போன என் தாமரையே!!!!!
உன்னை அபகரித்த ஆற்றங்கரையை
இன்றுவரை நிராகரிக்கிறேன் !!
உன் கல்லறை வர சம்மதமின்றி ஊர் திரும்புகிறேன்
இருந்தும் உள் மனது உன்னிடம்
அழைத்து வந்தது !!
சந்தித்துக்கொண்டன
என் நிசப்தமும்
உன் நிசப்தமும் !!!!!
பிறகு முத்தமிட துடித்த உதடுகளால் சத்தமிட்டு அழுதேன் நான் !!
என் கண்கள்
குளமானது உன் கல்லறையில்
சில பூக்கள் மலர்ந்தன!!!
ஒற்றைப் பூ கற்களால் மூடப்பட்டதே-என் பருவ தேவதையை நீரே பருகிகொண்டதே
திரும்பிப் போகிறேன்
உன்னை பற்றிய தாகங்கள்
தீராமலே !!!!
Post a Comment