நாம் ஜனித்தோம்.

வாழுகின்றோம்

ஆனால் சிலவற்றை

இழந்து விட்டு

வாழுகின்றோம்!!!


ஈதென்ன விந்தை!?

உண்மைதான்.!

குழந்தைப் பருவத்தை 

இழந்து விட்டு!

வாலிபம் தாண்ட

வாழுகின்றோம்.....


நினைவலைகள்

பின்னோக்கி

நீந்துகிறது....?


கள்ளமில்லா வெள்ளை

உள்ளம் தேடுது....

மரப்பாச்சி பொம்மைகளில்

விளையாடியதை....

கை நீட்டியவர்

கைகளில் தஞ்சமடைந்ததை....


தூக்கி  கொஞ்சுகையில்

கிடைத்த கணக்கிலா

முத்தங்களை.....


குழந்தைகளே நீங்கள் தேவதைகள்....


நாங்கள் வளர்ந்து

விட்டதால்

நாலும் தெரிந்து 

விட்டதால்


வஞ்சக நெஞ்சுகளில்

நஞ்சுகளை

உள்வாங்கி

எங்களையே

தொலைத்து விட்டோம்.....


அழகிய திருஷ்டிப்போட்டு

அன்னையின் பாலூட்டலுக்கு பின்

அழகான தூளியாட்டம்....


கண்விழித்து கதறுகையில்

கனிவாய் வாரும் கரங்கள்

அத்தனையும் இழந்து விட்டோம்.....


அடுக்கி வைத்தவற்றை

கலைத்து விட்டு.....

தாய்தொடுத்த பூச்சூடலை

வலித்து இழுத்து

உதிரிப்பூ ஆக்கிவிட்டு

கைதட்டி களிப்பதை....


இழந்து விட்டு 

இன்னல் படுகிறோம்.....


வாய்ப்பு ஒன்று 

கிடைக்குமென்றால்

தேவதைகளின் தேசமே

போதுமென்பேன்......

காரணம்....


நான் கயவர்களின்

தேசத்தில்

களவாணியாக

களங்கமுள்ள

உள்ளம் கொண்ட

கயமைத் தனம்

உடையவனாய்த் தான்

இருக்கிறேன்!!!


தேவகுழந்தைகளே

நீங்கள் ஆசீர்வதிக்கப்

பட்டவர்கள்........!!!


என்னையும் உங்கள்

தேசத்திற்கு

அழைத்து

செல்லுங்களேன்.....!!!.


குழந்தையாக....

       நான்..!!

Post a Comment

Previous Post Next Post