மழை பெய்வதற்கு முன்னால் வந்து

காற்றில் கலக்கும் மழை வாசமாய்

அவள் தொலைவில் இருந்தாலும்

என் மூக்கிற்கு அவள் வாசனை தெரியும்

என் கண்கள் தூர நோக்கி கருவியாய்

உன்னைக் காண காத்திருக்கிறது

மனம் துள்ளிக் குதிக்கிறது உனக்காக

மனதில் மகிழ்ச்சி வெள்ளம் வழிகிறது.

எந்தப் பெண்ணிலும் இல்லாதது

உன்னிடம் என்ன இருக்கிறதோ

எனக்குத் தெரியாத அந்தப் புதிர்

என் மனசுக்கு மட்டும் புரிகிறது எப்படியோ?.

அவள் வந்தும் அவள் பற்களில்-

ஒளி உமிழும் வெளிச்சம் மிளிர்கிறது!

அவள் குரும்பகப் பேச்சினாலும்;

கரும்பகக எப்போதும் இனிக்கிறதே!

எனக்காக நாள் தினமும் வருவளா?

அவள் பேச்சில், மூச்சில், சிரிப்பில், ஆவல்

ஏதோ மந்திரசக்தி கொட்டுகிறதே

அதனாலா நான் தினமும் மயங்குகிறேன்.

எனக்கு நேர்வது போலவே

அவளுக்கும் நேர்ந்திருக்குமோ?

அப்படி நேர்ந்திருந்தால் அதற்கு

என்ன் காரணம் தெரியவில்லையே

சூரியன் உதிர்க்க காலை வேளை வரலாம்,

காற்று வீசாத பூமியும் இருக்கலாம்,

நிலா முளைக்காத நீலவானமிருக்கலாம்,

அவள் வராத வேளையில் எதுவும் வேண்டாமே!.



2 Comments

Post a Comment

Previous Post Next Post