1) பெற்றோர்களை நோகடிக்காதே... நாளை உன் பிள்ளையும் உனக்கு அதை தான் செய்யும்...!!
2) பணம் பணம் என்று அதன் பின்னால் செல்லாதே... வாழ்க்கை போய் விடும்...
வாழ்க்கையையும் ரசித்துக் கொண்டே போ...!!
3) நேர்மையாக இருந்து என்ன சாதித்தோம் என்று நினைக்காதே.. நேர்மையாக இருப்பதே ஒரு சாதனை தான்...!!
4) நேர்மையாக இருப்பவர்களுக்கு சோதனை வருவது தெரிந்ததே, அதற்காக
நேர்மையை கை விட்டு விடாதே... அந்த நேர்மையே உன்னை காப்பாற்றும். ..!!
5) வாழ்வில் சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் கோபப்படாதே...
சந்தோஷம் குறைவதற்கும், பிரிவினைக்கும் இதுவே முதல் காரணம்...!!
6) உன் அம்மாவிற்காக ஒரு போதும் மனைவியை விட்டு கொடுக்காதே...
அவள் உனக்காக அப்பா அம்மாவையே விட்டு வந்தவள்...!!
7) உனக்கு உண்மையாக இருப்பவர்களிடம்... நீயும் உண்மையாய் இரு...!!
அடுத்தவர்களுக்கு தீங்கு செய்யும் போது இனிமையாகத்தான் இருக்கும்...
அதுவே உனக்கு வரும் போது தான், அதன் வலியும் வேதனையும் புரியும்...!!
9) உன் மனைவி உண்மையாக இருக்க வேண்டும் என்று, நீ நினைப்பது போல்...
நீயும் உண் மனைவிக்கு உண்மையாய் இரு, எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்காதே, அதுவே உன் மனைவிக்கு கொடுக்கும் மிகப்பெரிய பரிசு...!!
10) ஒருவன் துரோகி என்று தெரிந்து விட்டால்... அவனை விட்டு விலகியே இரு...!!
11) எல்லோரிடமும் நட்பாய் இரு... நமக்கும் நாலு பேர் தேவை...!!
12) நீ கோவிலுக்கு சென்று தான் புண்ணியத்தை சேர்க்க வேண்டும் என்பதில்லை... யாருக்கும் தீங்கு செய்யாமல் இருந்தாலே... நீ கோவில்
சென்றதற்கு சமம்...!!
13) நிறை குறை இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை... அதில் நிறையை மட்டும்
நினை... நீ வாழ்க்கையை வென்று விடலாம்...!!
14) எவன் உனக்கு உதவி செய்கிறானோ, அவனுக்கு மட்டும் ஒரு நாளும் துரோகம் செய்யாதே... அந்த பாவத்தை நீ எங்கு போனாலும் கழுவ முடியாது...!!
15) அடுத்தவர்களைப் போல் வசதியாக வாழ முடியவில்லை என்று நினைக்காதே... நம்மை விட வசதியற்றவர்கள் கோடி பேர் இருக்கிறார்கள்
என்பதை மனதில் கொள்...!!
16) பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில், நீ செய்யும் பாவம் புண்ணியம் மட்டுமே உனக்கு மிஞ்சும்... உன்னுடன் கடைசி வரை வருவதும் இதுவே!
إرسال تعليق