தெருவெங்கும் சுற்றி...
தேரோட்டியாய்...
பழைய டயருருட்டி...
ஒற்றை வண்டி பெயர் வைத்து...
போட்டியிட்டு விளையாடையிலே...
கல்லும் குத்தியதில்லை...
காலணியும் அணிந்ததில்லை...
வெயிலும் சுட்டதில்லை...
வெறுங்காலோடு சுற்றயிலே...
அப்போதிருந்த சந்தோசமெல்லாம்...
அப்படியே மாறிவிட...
சின்ன வயது ஞாபகமெல்லாம்...
சிந்தனையில் விளையாடிடவே...
மகிழ்ச்சியான தருணமாக...
மனதெங்கும் வந்து தங்க...
வசந்தகாலமாய் வந்து செல்கிறது...
சிறுவயது ஞாபகங்கள்...
إرسال تعليق